(சித்தாண்டி நித்தி) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செவ்வாய்கிழமை காலை( 29.07.2014) இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கண்ணகிபுரம் லயன்ஸ் கழக வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த பு.அன்புராஜ் வயது (29)என்வரது வீடே இவ்வாறு எரிந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆலய உற்சவ இறுதி நாளாகிய இன்று நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அருகில் உள்ள புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்த வேளை தமது வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட குத்து விளக்கு தவறி விழுந்ததினால் தீயானது வீட்டின் முழு பகுதியினையும் பரவியதினால் தீயினை கட்டுப்படுத்த முடியாத நிலமை ஏற்பட்டதாக வீட்டு உரிமையாளர் திருமதி ராதிகா அன்புராஜ் வயது (24) தெரிவித்தார்.
இதேவேளை இப்பகுதியில் கச்சான் காற்று என்று அழைக்கப்படும் பருவப்பெயற்சிக்காற்றின் தாக்கம் அதிக வேகத்துடன் வீசுவதனால் இடம்பெற்ற அனர்த்தத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.
ஏற்பட்ட தீயினால், காணி உறுதி ஆவணங்கள் பிறப்பு பதிவுகள் தொடர்பான அரச ஆவணங்கள் உடைகள்,தளபாடங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்;ள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பே இவ்வீட்டினை நிர்மானித்து வாழ்கை நடத்த முற்பட்டதாகவும் தமக்கு 2 பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவித்தனர். இவ் அனார்த்தத்தினால் தனது பிள்ளைகளை வைத்திருப்பதற்குகூட இடமில்லையென வீட்டின் உரிமையாளர் தெரிவித்தனர்.
தமக்கு ஏற்பட்டுள்ள இவ்வனர்த்தத்தை ஈடு செய்ய யாராவது முன்வந்து உதவி புரிய வேண்டும் என்று மனக்கவலையுடன் கண்ணீர் மல்க மேலும் கூறினார்.