மீள்குடியேற்ற பிரதியமைசரினால் கமநலகேந்திர நிலையத்தின் உரக்களஞ்சியசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

(சித்தாண்டி நித்தி) வாழைச்சேனை கமநலகேந்திர நிலையத்தின் உரக்களஞ்சியசாலை கட்டிடத்திற்கான அடிக்கல்லை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று புதன் கிழமை (16) நண்பகல் வேளை நாட்டி வைத்தார்.

பொருளாதார அமைச்சின் விவசாய திணைக்களத்திற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் 4மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மானிக்கப்படவுள்ளது.

மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச விவசாயிகள் கலந்துகொண்டனர். இக்கட்டிடம் கட்டப்படுவதனால் 10 ஆயிரம் உர மூடைகளை அடுக்கி வைத்து பாதுகாக்கமுடியும் என்றும் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யவும் முடியும் என்று வாழைச்சேனை கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் எம்.ஏ.றசீட் கருத்து தெரிவித்தார்.