அரசாங்க அதிபரால் போரதீவுபற்று - வெல்லாவெளி பிரதேசசபைக்கு குடிநீர் விநியோகத்துக்கென வாகனங்கள் வழங்கிவைப்பு

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் நிலவுகின்ற வரட்சி காரணமாக விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டன. 

இதனையடுத்து உலக உணவுத்திட்டத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த வேண்டுகோளுக்கமைய அடுத்த வாரம் முதல் உலர் உணவு நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், அனர்த்த நிவாரண முகாமைத்துவ அமைச்சிடம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக முன்வைக்கப்பட்ட வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்துக்கான 8 பவுசர்களில், ஒரு தொகுதி ரக்ரர் மற்றும் பவுசர் நேற்று (19.08.2014)  முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை அரசாங்க அதிபரால் போரதீவு பற்று - வெல்லாவெளி பிரதேச சபைக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர்த்தட்டுப்பாட்டை எதிர் கொள்ளும் பிரதேச மக்களின் நலன் கருதி அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சிடம் மாவட்ட செயலகத்தினால் விடுக்கப்பட்டு வெண்டுகொளுக்கிணங்க ரக்ரர் வண்டி ஒன்றும் நீர் தாங்கி (பவுசர்) அடங்கிய தொகுதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் அதிகம் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசமான போரதீவு பற்றுக்கு வடங்கப்பட்டது.

இதனைக் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19)  மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இடம் பெற்றது,

இந்த புவுசர் தொகுதி போரதீவ பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரனிடம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸால் வழங்கி வைக்கப்பட்டது இதன் போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.