செங்கலடி இலுப்பயடிச்சேனை வயல் கண்டத்தில் நடைபெற்ற சிறுபோக அறுபடை விழா

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு உறுகாமத்திட்டத்தில் உள்ள பாலகன்கேணி, கூமாச்சோலை, மயிலவட்டவான், தளவாய், பவளவட்டவான் ஆகிய கண்டங்களில் சிறுபோக அறுவடை விழா இன்று (23) சனிக்கிழமை இலுப்பையடிச்சேனை பாலகன்வெளிக் கண்டத்தில் திரு.வ.கந்தசாமி தலைமையில் நடைபெற்றன. 

நடைபெற்ற அறுவடை விழாவில் முதன்மை விருந்தினராக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலாளர் திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், கௌரவ விருந்தினர்கள் மாவட்ட  பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஏந்திரி.எஸ்.மோகனராசா, மாவட்ட  கமத்தொழில் உதவி ஆணையாளர் திரு.என்.சிவலிங்கம் விசேட விருந்தினர்களாக ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் உறுகாகாமப்பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் அழைப்பு விருந்தினர்களாக  கரடியனாறு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.சி.மகாலேகம, நீர்பாசன பொறியலாளர் எந்திரி திரு.ஜெயன்பார்த்த சாரதி, கரடியனாறு கமநலசேவை உத்தியோனத்தர் திரு.சி.பத்மநாதன் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு அறுவடைவிழா ஆரம்பமாகின. அதனைத்தொடர்ந்து சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் வருகைதந்த அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.