(சித்தாண்டி நித்தி) மாவடிவேம்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'ஏர்முனை' அமைப்பு அலுவலகம் அதன் தலைவர் மா.சிவராசா தலைமையில் இன்று (12) முற்பகல் 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டன.
ஏறாவூர்பற்று பிரதேசத்தில் பதிவுசெய்யபட்ட சுமார் 612 மாற்றுத்திறனாகளையும் புதிதாக பதிவு செய்யப்படுவர்களையும் ஒன்றினைத்து அனைத்து தகுதிகைளுமுடைய நபர்களாக அவர்களையும் சமூகத்தில் முன்னிறுத்தி அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இவ் அமைப்பில் யுத்தத்தால் மட்டுமின்றி பிறப்பினால் மாற்றுத்திறனாளிகளாக உள்ள அனைவரும் உள்ளடங்கின்றனர்.
இவ் நிகழ்வுக்கு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஏர்முனை அமைப்புக்குரிய அலுவலகத்தைத் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று சமூகசேவைகள் உத்தியோகத்தர் திரு.ராஜ்மோகன், கமிட் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் திரு.காண்டிபன், கன்டிக் கப் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் திரு.ரி.பகிதரன், வேல்ட் விசன் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் திரு.அமலன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.