(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாட்டத்திற்கான பெரும்போக விவசாயச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஏறாவூர்பற்று பிரதேச பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (26) செவ்வாய்கிழமை ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றன.
மாவட்டத்தில் இவ்வருடத்திற்கான பெரும்போக விவசாயசெய்கை தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கிரிதரன் நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மாவட்டத்திலுள்ள விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள் மற்றும் பலர் கலந்துகொண்டிருப்பதை காணலாம்.