(சித்தாண்டி நித்தி) ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரதேச செயலக பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிராமத்துக்குள் உட்புகுந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் உள்ள பெறுமதி மிக்க தென்னை மரங்கள் மற்றும் வாழை, மரவள்ளி என பல்வேறுபட்ட பயிர்களை துவச்சம் செய்துள்ளது.
வந்தாறுமூலை காட்டுப்பகுதி மற்றும் சந்தனமடு அண்மித்த அத்தவளைக் காட்டுக்குள் குடிகொண்டிருக்கும் இக்காட்டு யானை, வெள்ளிக்கிழமை (17) அதிகாலை வேளை வந்தாறுமூலை எல்லையிலுள்ள எனது காணிக்குள் உள்ள தென்னை மரங்களை உடைத்து அழித்துள்ளதாக வீட்டின்; உரிமையாளரான சிவசுதன் சுலோஜினி
தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நான் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு கடவுளை மாத்திரம் தான் வணங்கிகொண்டு இருந்தேன் எனது வீடும் சிறிய வீடு, வந்த யானை வீட்டின் அருகிலுள்ள வாழை மற்றும் மரவள்ளி, தென்னைமரத்தை அடித்து உடைத்து சாப்பிட்டதே தவிர வீட்டுக்குள் இருந்த எங்களை கவனிக்கவில்லை. நாங்களும் பயத்தில் எந்தவித சத்தமும் போடாமல் யானை சாப்பிட்டு போகும் வரைக்கும் ஒழித்துக்கொண்டு இருந்தோம் என தெரிவித்ததுடன், இதுபோன்று கடந்த மாத்தில் காட்டு யானைகள் வந்ததாகவும் ஒவ்வொரு நாளும் நான் இரு சிறு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு மின்னசார வசதியற்ற இந்த சிறிய வீட்டில் வசிப்பதாகவும் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தாறுமூலை குடியிருப்புகளில் உட்புகுந்த காட்டுயானைகள் இரண்டு வீட்டுக்காணியிலுள்ள தென்னை மரங்கள் மற்றும் வாழை, மரவள்ளி மரங்களையும் துவச்சம் செய்துள்ளதை படங்களில் காணலாம்.