(சித்தாண்டி நித்தி) ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரதேச செயலக பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிராமத்துக்குள் உட்புகுந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் உள்ள பெறுமதி மிக்க தென்னை மரங்கள் மற்றும் மரவள்ளி என பல்வேறுபட்ட பயிர்களை துவச்சம் செய்துள்ளது.
இக்குடியிருப்பு பகுதிக்குள் இம்மாத்துக்குள் மூன்றாவது தடவையாக காட்டு யானைகள் உட்புகுந்ததினால் இப்பகுதியிலுள்ள பெறுமதிமிக்க தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காட்டு யானைகளின் தொடர்ச்சியான வருகையினால் இப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இரவுவேளையை அழிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளின் தொடர்ச்சியான வருகையினால் இப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இரவுவேளையை அழிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இக் காட்டு யானைகள் புதன்கிழமை (23) அதிகாலை மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்து காணியிலுள்ள பெரிய மற்றும் சிறிய 13 தென்னை மரங்களையும் மற்றும் மரவள்ளி மரங்களையும் துவம்சம் செய்துள்ளது.
'பொறுப்புமிக்க வனவிலங்கு அதிகாரிகளும் இப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கவனம் செலுத்துமாறும்' பிரதேச மக்கள் விசனம்தெரிவிக்கின்றனர்.