6 பிள்ளைகளின் தந்தை யானை தாக்கி பலி

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவுட்பட்ட கண்டியநாறு அபயன்ட  திடல் எனும் இடத்தில் வைத்து நேற்று (27) மாலை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியநாறு அபயன்ட  திடலில்  மாடு மேய்பதற்காக சென்றவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கின்றனர்.


உயிரிழந்தவர் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுட்குட்பட்ட கொல்லநுலை கிராமத்தைச் சேர்ந்த பாலிப்போடி - இராசதுரை, வயது 55, 06பிள்ளைகளின் தந்தை எனவும் இனங்காணப்பட்டுள்ளது.

தற்போது இவரது சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.