மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு கோறளைப்பற்று பிரதேச செயலக ஊழியர்களால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் கே.விவேக், கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். பிரபாகரன் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி உத்தியோத்தர்களும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தம் அதிகளவு தேவைப்படுவதால்
இரத்ததானம் செய்ய விரும்புவோர் வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு
கொண்டு இரத்ததானம் செய்து கொள்ள முடியும் என்று மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் கே.விவேக் தெரிவித்தார்.




.jpg)


.jpg)
.jpg)
.jpg)


