புனரமைக்கப்பட்ட ஒல்லாந்தர் கோட்டை கட்டடம் கையளிப்பு


(தனுஸ்)
மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையை கலாசார மத்திய நிலையமாக மாற்றும் திட்டத்தின் முதற்கட்டமாக புனரமைக்கப்பட்ட முதலாவது கட்டடம்  அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

அமெரிக்க உதவித்திட்டத்தின் நிதியுதவியில் தொல்பொருள் ஆராய்ச்சித்திணைக்களமும் கட்டட வடிவமைப்பு திணைக்களமும் இணைந்து பேராசிரியர் பாலி விஜேயவர்த்தனவின் வழிகாட்டலில் இத்திட்டத்தை  நடைமுறைப்படுத்தியது.

8 மில்லியன் ரூபாய் செலவில் இந்தக் கட்டடம் புனரமைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்நெடுஞ்செழியன் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் மாவட்ட செயலக அதிகாரிகள் கணக்காளர் கிழக்கு மாகாண கட்டடக் கலை திணைக்கள முன்னாள் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எச்.ஏ.சுமணதாச சிரேஸ்ட தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் சிரேஷ்ட படவரைஞர் ஜகத் விஜயரத்ன உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டனர்.