கோட்டைகல்லாறு தெய்வநெறி கழகத்தின் சுவாமி விவேகானந்தரின் 152வது பிறந்த தின நிகழ்வும் பரிசளிப்பும்

( ரவிப்ரியா )
கோட்டைக்கல்லாறு தெய்வநெறிக் கழகத்தின் சுவாமி விவேகானந்தரின்  152வது பிறந்தநாள் விழாவும் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் 26வது ஆண்டு பரிசளிப்பும், அண்மையில் பல்தேவைக் கட்டட மண்டபத்தில் அறசெறிப் பாடசாலை அதிபர் ந.இராசரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்க்களப்பு மாவட்ட சமூக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் கே.விக்னேஸ்வரனும், ஏனைய அதிதிகளாக கோட்டைக்கல்லாறு பதில் வண்ணக்கர் கிருபைராசா நிருவாக உத்தியோகத்தர் தவேந்திரன் சமூக உயர் கல்வி ஒன்றியத்தின் தலைவர் சி.அகிலன்,  கிராம உத்தியோகத்தர் ஜி.ருத்திராகணேசன், இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி குமுதினி பரமசிவம்  உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதிதிகள் வரவேற்கப்பட்டு, அதிதிகளால் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அன்னை சாரதாதேவிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, மங்கல விளக்கேற்றி இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. சுவாமியின் புகழ் பரப்பும் கீதமிசைக்கப்பட்டு. உரைகள் நிகழ்த்தப்பட்டு, அறநெறி பாடசாலை மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் ;வழங்கப்பட்டு,அதிதிகள ;இருவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.