.jpg)
மட்டக்களப்ப மாவட்டத்தில் முழுமையான பாதுகாப்புக்கு மத்தியில் பாரிய தேர்தல் வன்முறைகள் இல்லாத நிலையில் இன்று வியாழக்கிழமை (08) வாக்காளர்கள் வாக்களித்துள்ளதைக் காண முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப் பகுதியில் 60.3 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமான பி.எஸ். ஏம். சாள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகளிலும் கல்குடாத் தொகுதியில் 62.29 வீதமும், மட்டக்களப்புத் தொகுதியில் 64.09 வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 54.52 வீதமும் வாக்களிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்குச் சாவடிகளுக்கான பாதுகாப்பினை பொலிசார் மேற்கொண்டதுடன் சர்வதேச கண்காணிப்புக் குழுவினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
படம் a மற்றும் b என்பன கோட்டைமுனை 6 ஆம் வட்டார கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து வாக்குகளை எண்ணுவதற்காக மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படுவதையும், ஏனைய படங்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து எண்ணுவதற்காக எடுத்துவரப்படுவதையும் காணலாம்.மட்டக்களப்பு மாவட்டத்தின் வாக்களிப்பு வீதம் 60.3 % என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியுமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்