கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் நாள் விழா - ஒரு கண்ணோட்டம்

( ரவிப்ரியா )
சமூக நோக்கோடு கூடிய கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின். கழக நாள் விழா 11.01.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அ.அகிலன் தலைமையில் கல்லாறு கலாசார  மண்டபத்தில் அர்த்தபுஸ்டியாக நடைபெற்றது.
அழைப்பில் உள்ளபடி பிரதம அதிதி எம்.பி. பொன்செல்வராசா உட்பட அதிவிசேடஅதிதிகளான மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராஜா, பி.இந்திரகுமார், இ.துரைரெட்ணம் உட்பட அதிதிகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக கலந்து கொண்டு நிகழ்விற்கு  கௌரவம் சேர்த்தனர்.

   நிகழ்வொழுங்குகள் -

  நேர்த்தியான நன்கு திட்டமிட்டபடி நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அதிதிகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 81 மாணவர்களும் வாண்டவாத்தியம் முழங்க ஊர்வலமாக குறித்த நேரத்திற்கு சீருடையணிந்த சுமார் 80க்கு மேற்பட்ட கழக அங்கத்தவர்களால் அழைத்துவரப்பட்டது உண்மையில் கண்கொளா காட்சியாக இருந்தது.

    மண்டப வாசலில் தேசிய மற்றும் கழக கொடிகள் சம்பிரதாயபுர்வமாக ஏற்றிவைக்கப்பட்டு, ஒரு மாதகாலத்திற்கு மேலாக விசேட கலை நுட்பத்துடனும் நவீன தொழில் நுட்பத்துடனும், கழக கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான மேடையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

  தலைமையுரை -

கழகத்தின் தலைவர் அ.அகிலனின் தலைமையுரை மிகவும்  காத்திரமாக அமைந்தது. விளையாட்டுக் கழகமாக இருந்தாலும், சமூகப் பற்றோடு.  சமூக நோக்கோடு, தாங்கள ;செய்யும் சேவைகளை பட்டியலிட்டார். மயானத்திற்கான கிரியை மண்டபம் அமைத்தது, மயான மதில் அமைத்துக் கொண்டிருப்பது. தேவை ஏற்படும் போதெல்லாம் சிரமதானங்கள் மேற் கொள்வது, இமயத்திற்கான கிரிக்கற் சமர்,  புலமைப் பரிசில் மாணவர்களுக்கான கௌரவம், உதிரம் கொடுத்து உயிர் காப்போம். மரநடுகை என தங்களின் தொடர்ச்சியான நிகழ்ச்சித் திட்டங்களை உணர்வு பூர்வமாக உரைத்தார்.

கடந்த வருடம் கழகத்திற்கு எதிரான கடுமையான மோசான சதி முயற்சி -

 காய்த்த மரம்தான் கல்லெறி படும் என்பதுபோல் கடந்த வருடம் தங்களுக்கேற்பட்ட அச்சுறுத்தல்களையும் மிகுந்தகவலையுடன் வெளிப்படுத்தினார். தங்களை இராணுவத்திடமும்,  புலானாய்வு பொலசாரிடமும் சிக்கவைக்கும் பாரிய சதி முயற்சியில் ஒரு சிறு குழுவினர் இயங்கியதையும் வெளிப்படுத்தினார். அது தமக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் வீண் ;சிரமங்களையும் ஏற்படுத்தியதாக தெரிவித்தார். பாரதூரமான அரசின் சட்டப்பிரச்சனைக்கு எம்மை ஆளாக்கவே திட்டமிட்டு அது மேற்கொள்ளப்பட்டது.

 எமது இத்தகைய கடந்த வருட விழாவையும் அதைத் தொடர்ந்து எம்மால் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வையும் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு சார்பாக நடாத்துவதாக முறைப்பாடு செய்துள்ளனர். இந்த சமூக விரோதிகளை சமூகம் இனம் கண்டு கொள்ள வேண்டியது அவசியமாகும். அவர்கள் எந்த நோக்கத்திற்காகச் செய்தார்களோ அது நிறைவேறவில்லை. மாறாக அவர்கள் முறைப்பாடுசெய்த அதிகாரிகளே அவர்களை கடுமையாக  எச்சரித்து அனுப்பினார்கள். எம்மை எமது தன்னலமற்ற சேவைக்காக வாழ்த்தி அனுப்பினார்கள். நாம் சமூகத்திற்காக தூய்மான சேவை செய்ய புறப்பட்டவர்கள். எனவே எல்லா வேளையிலும் எமது சேவை எம்மை காக்கும். அதுவே எமது நம்பிக்கை. தடைகள் தாண்டி எமதுசேவை தொடரும். ஏன உறுதிபடக் கூறினார்.

விளையாட்டும், படிப்பும் ஒன்றோடொன்று இணைந்து செல்ல வேண்டியவை –

 இன்றைய கல்வியில் இணைப்பாட விதானங்களும், இன்றியமையாததாக காணப்படுகின்றது. அதேபோல் ஒரு விளையாட்டிலேனும் மாணவர்கள் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கையாகும.; இந் நிலையில் மிகுந்த சிரமத்தியின் மத்தியில் உருவாக்கிய இமயத்திற்கான சமர் கல்வி வளர்ச்சிக்கு தடையானது, பாடசாலைக்குப் பாதகமானது என்று விமர்சனம் செய்வோர் விளையாட்டினதும் அவசியம் பற்றி அறியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்,

  11பேர் கிரிக்கற் விளையாடுவது கல்வி வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்றால், வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளில் எத்தனை மாணவர்கள் பங்கெடுக்கின்றார்கள், எவ்வளவு காலம் பயிற்சி எடுக்கின்றார்கள் என்பதற்கு என்ன சொல்லப் போகின்றார்கள் என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார். பட்டிருப்பு கல்வி வலயத்திலேயே கடின பந்து கிரிக்கற் அணியைக் கொண்டுள்ள ஒரே பாடசாலை எமது மத்திய கல்லூரி மட்டுமே. அதே போல் உள்ளுர் கிரிக்கற் சமரை வருடாந்தம் நகரிலும் கிராமத்திலும் சந்தித்து சாதிக்கின்றது எமதுபாடசாலை அணி. இது ஊருக்குப் பெரமையில்லையா?  ஆதற்கான கடின உழைப்பை செய்தது எமது கழகம் மட்டுமே. அது  சிலருக்குப் பொறுக்கவில்லையா? ஏன் இந்த பொறாமை?  ஏன்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.  
,

  கழக நாளுக்கு கனதி சேர்த்த நிகழ்வு –
 
    இவ்வாண்டு முதல் மற்றுமொரு சமூக வாழ்வாதார நிகழ்வையும் அவர்கள் ஆரம்பித்துள்ளார்கள். விசேட தேவையுடைய இளம் குடும்பஸதர் ஒருவருக்கு ரூபா ஒன்றரை இலட்சம் பெறுமதியான அரைவை இயந்திரம்  ஒன்றை வழங்கி சமூக சேவையில் ஒரு மைல் கல்லை கடந்துள்ளார்கள். இதை ஒவ்வொரு ஆண்டும் தொடர்வதற்கும் திடசங்கர்ப்பம் பூண்டுள்ளனர். இது குறித்து நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் அனைவரும், வெகுவாகப் பாராட்டியதுடன், சமூக நோக்கில் இது முன்ன்pலை படுத்துக்கூடிய முன்மாதிரியான நிகழ்வென வர்ணித்துள்ளனர். அத்துடன் சிறப்பாகச் செயற்படும் இந்த கழகத்தின் தேவைகளை நாம் தேடி வந்து நிவர்த்தி செய்யக் காத்திருக்கிப்றோம் என்றும் உத்தரவாதம் அளித்ததம் இங்கு குறிப்பிடத் தக்கது.   

கௌரவங்களும், பரிசளிப்பும் -

பெரியகல்லாற்றை மட்டுமன்றி அயல் கிராமங்களையும் சேர்த்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 81 மாணவர்களை கௌரவித்து நினைவுப் பரிசுகளையும் வழங்கி வைத்தனர். அத்துடன் பரீட்சைக்குப் பொறுப்பான ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு தேவைகளை

வழங்கி வைத்துள்ளதும் விசேட அம்சமாகும். விளையாட்டுப் போட்டிகளில்; கழக ரீதியாக சாதித்த அங்கத்தவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் மேடை அமைப்பிற்கு பொறுப்பு வகித்த கலைஞர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். பரிசு வழங்கல் கௌரவிப்பு என்பவற்றை, விஸ்தரிப்பது கழகத்தின் வளர்ச்சிப் போக்கையும், சொந்த சமூகத்திற்கு அப்பால் பிராந்தியம் நோக்கிய சமூக நகர்வதற்கான அதன் விருப்பையும் முயற்சியையும் வெளிப்படுத்துகின்றது.

கலை நிகழ்வுகள் -

நிகழ்வில் இடம் பெற்ற கலை நிகழ்வுகள் அனைத்தும் வெகு சிறப்பாக அமைந்திருந்தன. பொருத்தமான மேடை அமைப்பு கலை நிகழ்வுகளுக்கு நன்கு மெருகூட்டியது.. உடனுக்குடன் அவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அறிவிப்பாளருக்கு விசேட பாராட்டு –

நிகழ்ச்சிகளை சுமார் 5 மணித்தியாலங்கள் எவ்வித தளம்பலுமின்றி தொடர்ச்சியாக தொகுத்தளித்த, ந.தனுசாந்தின் ஆறிவிப்பு ஆற்றலை மாகாண சபை உறுப்பினர்  அதிவிசேட அதிதி இரா.துரைரெத்தினம் வெகுவாக பாராட்டிப் பேசியது விசேட அம்சமாகும். எவ்வித கலப்பு மொழியும் பயன்படுத்தாமல், சுத்த தமிழில் அலுப்படிக்காமல், இனிமையான தெளிவான குரலில் தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது என்று அவா குறிப்பிட்டார்.

பொது –

ஒருவிளையாட்டுக் கழகம் கல்விப் புலம் சார்ந்த நிகழ்வை, தனது கழக நாளில் கச்சிதமாக நடாத்தியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. முன்பு 3 மணித்தியாலயத்திற்கு மேல் காட்டப்பட்டு வந்த சினிமாக்கள் 2மணித்தியாலயமாக, மட்டுப்படுத்ப்பட்டு விட்டது. ஆனால் ஒரு  அரங்கில் சிறுவர்களும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வை 5 மணித்தியாலயத்திற்கு மேல் கொண்டு நடாத்தியது பொருத்தமானதாகத் தெரியவில்லை. எதிர் காலத்தில் நேரச் சுருக்கத்திற்கும் முன்னுரிமை அளித்தால் நிகழ்ச்சி மேலும் மெருகேறும்