(நித்தி) ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுகுப்பட்ட சித்தாண்டி சந்தணமடு வீதி எப்பொழுது புனரமைக்கப்படுமென மக்கள் கேள்வி தெரிவிக்கின்றனர்.
சித்தாண்டி சந்தணமடு ஆற்று பாதை நீண்ட காலமாக புனரமைக்கப்படாமை காரணமாக நாளாந்தம் போக்குவரத்துச் செய்யும் பொதுமக்கள் பெரும் ஆசோகரியத்துக்குள்ளாகுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
சித்தாண்டி கிராம மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியிருக்கின்ற நிலையில் சித்தாண்டியில் இருந்து சந்தணமடு ஆற்றைக் கடந்து வேரம், இலுக்கு, பெரியவட்டவான், பெருமாவெளி, ஈரளக்குளம், இலாவாணை, குருகன்நாமடு போன்ற கிராமங்களுக்கும், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் பல்வேறுபட்ட தேவைகளுக்காக நாளாந்தம் போக்குவரத்து செய்யும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இப் பாதையை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக அமைக்கப்பட்டதும் தற்பொழுது குன்றும் குழியுமாக காணப்படும் பாதையைத்தான் தற்பொழுதும் பாவித்துவருகின்றார்கள். இப்பாதையால் போக்குவரத்துச் செய்யும் போக்குவரத்து வாகனம் மற்றும் சைக்கிள் கூட ஒன்றையொன்று மாறிச் செல்லமுடியாதளவுக்கு பாதை மிகவும் மோசமாக காணப்படுவதாக போக்குவரத்துச் சாராதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சந்தணமடு ஆற்றில் மண் அகழ்வு மூலம் அதிகளவான உழவு இயந்திரம் மற்றும் ஏனைய போக்குவரத்து வாகனங்கள் ஈடுபடுவதால் ஏற்கனவே குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியானது மேலும் பாதிப்படைந்து காணப்படுவதால் மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பாதை நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையினால் வருடாவருடம் ஏற்படும் வெள்ளம் காரணமாக மிகவும் மோசமாக குன்றும் குழியுமாக காணப்படுவதால் தங்களுடைய வேளாண்மை அறுவடையைக் கூட அருகில் இருக்கும் சித்தாண்டிக் கிராமத்துக்கு கொண்டுசெல்ல முடியாதுள்ளதாகவும் தங்களின் அறுவடை நெல் மூட்டைகளை கிரான் மற்றும் வந்தாறுமூலை பாதையுடாகதான் சித்தாண்டிக்கு கொண்டு செல்ல முடிவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மணல் அகழ்வு மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் அதிகமாக போக்குவரத்துச் செய்யும் உழவு இயந்திர வாகனங்கள் விபத்துக்களாகுவதால் வாகனங்களின் அதிகமான பாகங்களை அடிக்கடி மாற்றவேண்டியும் உள்ளதாக போக்குவரத்து சாராதிகள் தெரிவிக்கின்றனர்.
வெள்ள காலங்களின்போது இப் பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குளாகின்றனர்.
நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து குறித்த வீதி சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரம் தேசத்திற்கு வேலைத்திட்டத்தின் (2013) கீழ் கொங்கிரீற் வீதியான மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய பகுதி சுமார் இரண்டரைக் கிலோ மீற்றர் குன்றும் குழியுமாக இருப்பதால் விரைவில் புனரமைத்து தருவதாக சம்பந்தப்பட்ட நீர்பாசன திணைக்கள (மத்திய) அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாக போக்குவரத்துச் செய்யும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சித்தாண்டி சந்தணமடு பாதை விவசாயிகளின் முதுகெளும்பாக இருப்பதால் இப்பாதையை புனரமைத்துக் கொடுப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையல்லவா? உரிய அதிகாரிகள் இவ் வீதி தொடர்பாக கவனம் செலுத்தும் பட்சத்தில் அதிகளவான விவசாயிகள் மற்றும் போக்குவரத்துச் செய்யும் பொதுமக்களின் வாழ்வாதாரத்திலும் மாற்றம் ஏற்படும்.