செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் முதலாவதாக நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டி

(சித்தாண்டி நித்தி) கல்குடா கல்வி வலய ஏறாவூர்பற்று -2 கல்விக்கோட்டப் பிரிவிலுள்ள செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் முதன் முதலாக இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வு வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலையின் அதிபர் கே.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்றது. 

நடைபெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் செ.சிறிகிருஸ்ணராஜா, சிறப்பு விருந்தினர்களாக ஏறாவூர்பற்று- 2 கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ.சிவகுரு, கல்குடா கல்வி வலய உடற்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுபாஸ்சந்திரன் மற்றும் கிராமசேவையாளர், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆலயத்தலைவர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். 

வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன் ஏனைய நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. 

இல்ல விளையாட்டின் இறுதியில் விளையாட்டுக்களில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்குமான பரிசில்கள் மற்றும் வெற்றிக்கேடயங்களும் வருகை தந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

2015ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்வானது கல்குடா கல்வி வலயத்திலே இப்பாடசாலையிலே முதன் முதலாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.