10 வயது யானை இறந்த நிலையில் மீட்பு

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நேருபுரம் தாமரைக்குளத்திற்கருகாமையில் சுமார் பத்து வயதுடைய யானையொன்று இறந்த நிலையில் உள்ளதாக திருக்கோவில் பிரதேச வனவிலங்கு அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேருபுரம் தாமரைக்குளத்தின் அருகாமையிலுள்ள பிரதேசத்தில் யானைகள் வந்து செல்வது வழக்கமாகும். இறந்து நிலையிலுள்ள இந்த யானை சுமார் 10 வயது இருக்கலாம்.   நோய்காரணமா சில தினங்களாக உணவு உட்கொள்ளாமல் மெலிந்த நிலையில் குறித்த யானை காணப்படுவதாகவும தெரிவித்தார்.

 யானையின் இறப்புக்கான சரியான காரணத்தை கண்டறியும் வகையில் மிருக வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை கோரப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.