(டில்ஷான்)கிராமிய மக்களின் கைத்தொழில் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்குடனும் உல்லாசத்துறையை ஊக்குவிக்கும் முகமாகவும் உற்பத்திப் பொருட்களை சர்வதேச மட்டத்தில் தரம் பொருந்தியதாக மாற்றும் நோக்குடனும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலகம் தனது பிரிவில் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்து வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக வேள்விஷன் நிறுவனத்தின் அனுசரனையில் பின்லான் (FinLand)) நாட்டின் நிதியளிப்பில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வகையில் சிரட்டை கைவினைப் பொருள் உற்பத்தியும் அதன் தரத்தை மேம்படுத்தலும் என்ற கருப் பொருளில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 35 பேருக்கு ஐந்து நாள் பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (24.03.2015) இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பின்லான் ((FinLand)) நாட்டின் இலங்கைத் தூதரகத்தின் உத்தியோகத்தர் எலினா ((Elina)) வேள்விஷன் நிறுவனத்தின் வலய முகாமையாளர் ஜே.ரமேஸ்குமார், பிரதேச அபிவிருத்தி திட்ட முகாமையாளர் எட்வின் ரணில் பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சிரட்டையை மூலப் பொருளாகக் கொண்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் கைவினைப் பொருள் உற்பத்தியை பூர்த்தி செய்த 35 பேருக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டன.