ஆசிரியர்களுக்கான பாடசாலை அபிவிருத்திச் செயலமர்வு

(எஸ்.சதீஸ்)
பாடசாலை அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் எஸ்கோ (ESCO)  பயிற்சி நிலையத்தில் இன்று 14.03.2015 ம் திகதி இடம்பெற்றது.

GIZ முன்னோடிப் பாடசாலைகளுக்கான பாடசாலை மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட வதிவிடச் செயலமர்வாக இடம்பெற்றது.

பாடசாலை மட்ட மாணவர்கள் 2008ம் ஆண்டு 15ம் இலக்க சுற்றுநிருப நடைமுறைக்கமைவாக மாணவர் பாராளுமன்றத்தினூடாக பாடசாலை மற்றும் மாணவர்களை சகல வழிகளிலும் அபிவிருத்தியடையச்செய்யும் நோக்குடன் மேற்படி செயலமர்வு பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.