பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது உன்னிச்சைக் குளம் உட்பட சிறு குளங்களிலிருந்து நீர்பாசனம்மூலம் மேற்கொள்ளப்படும் விவசாயம் மற்றும் நெற்செய்கைகள் பற்றி ஆராயப்பட்டது.
மேலும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான கால்நடைகளை வௌியேற்றுதல்,மண் அகழ்வு, நீர் வினியோகம் போன்ற பல விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இதில், கால்நடைகளை வௌியேற்றம் செய்து அதற்கென ஒதுக்கப்பட்ட மேச்சல்தரைகளில் வைத்திருப்பதில் தொடர்ச்சியாக பெரும் பிரச்சனை ஏற்பட்டுவருகின்றது. இதற்கு நிரந்தர தீர்வினை இதுவரை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப் பிரதேச விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகள் நிரந்தரமாக தீர்க்கப்படாடல் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. என மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்தால் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் விதைப்பு மேற்கொள்ளும் ஆரம்பத் திகதி 05.04.2015 எனவும் விதைப்பு முடிவுத் திகதி 20.04.2015 எனவும் தீர்மானிக்கப்பட்டு.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் மற்றும் த.தே.கூ மாகாணசபை உறுப்பினர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். மோகன்ராஜ் உட்பட அரச தினைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.