(நித்தி) சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் யுவதி சிகிரியா ஓவியத்திலே எழுதியமைக்காக இன்று தண்டனை பெற்றிருக்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
அவர் தொடந்தும் இது தொடர்பாக கருத்துதெரிவிக்கையில் ;
குறித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு வருட சிறைத் தண்டனையை பெற்று சிறை அனுபவதித்துவரும் சின்னத்தம்பி உதயசிறி எனும் யுவதிக்குரிய விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாங்கள் ஒன்று சேர்ந்து தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் அமைச்சுப்பதவியை பெற்றிருக்கும் துரைராஜாசிங்கம் அவர்களும் சேர்ந்து கௌரவ தலைவர் ஊடாக ஜனாதிபதி அவர்களிடம் கருணை மனுவைக் கொடுத்து பொதுமன்னிப்பைக் கோரவிருக்கின்றோம்.
குறித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் யுவதியை வெளியில் எடுப்பது கடமை எங்களுக்கு இருக்கின்றது.
அவ்வாறான நிலைமையில் ஏதாவது தடகைள் ஏற்ப்பட்டால் அதனை மேற்கொண்டு குறித்த விடயத்திற்கு எந்தவகையில் நடவடிக்கை எடுக்கமுடிமோ அவற்றை எடுத்து குறித்த சகோதரியின் விடுதலை குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவருகின்றோம்.
வெறுமன நாங்கள் ஊடகங்களுக்காக மாத்திரம் செயற்பாடுகளைச் செய்வர்கள் அல்ல, எங்களது மக்களின் தும்பியலை துடைக்கவேண்டும் என்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கையைச் செய்கின்றோம் என குறிப்பிட்டார்.
இரண்டு வருடம் சிறைத்தண்டயை பெற்று சிறையில் இருக்கும் உதயசிறியை வெளியில் கொண்டுவரும் கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.




.jpg)


.jpg)
.jpg)
.jpg)


