
தமிழ்த் தேசிய கூட்டமைபிலிருந்து நான் பிரிந்து சென்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக இணைய ஊடகமொன்றில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என கிழக்கு மாகாண உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்........
தமிழ்த் தேசிய கூட்டமைபிலிருந்து நான் பிரிந்து சென்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ளவுவுள்ளதாக இணைய ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் தன்மானத் தமிழனாக வாழ வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனது வாக்கு வங்கியினை முறியடிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் எனது அரசியல் வளர்ச்சியை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் தவறான செய்திகளை ஊடகங்கள் பரப்ப வேண்டாம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
நான் தமிழ் மக்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்னிள் மீதும் மிகுந்த பற்றுடனும் உறுதியுடனும் இருக்கின்றேன். இவ்வாறான பொய்பிரசாரங்களை மக்களாகிய நீங்கள் நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்தார்.
அண்மையிலே மண்டூர் 40ம் கிராமத்திலே இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது வெள்ளிமலை அவர்கள் இவ்வாறு தெரிவித்தார் ''மக்கள் நான் தேர்தலில் போட்டியிடுவதை விரும்புகின்றார்கள். அதனை சில அரசியல் வாதிகளின் தன்னிறைவு பெறுவதற்காக என்னை ஓரங்கட்ட நினைத்தால் அது வீண்கனவாகி விடும் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு பாமர வர்க்கத்தைச்சேர்ந்தவன் ஆனால் நான் மக்கள் செல்வாக்குப்பெற்றவன் என்று கூறினார். என்பதும் குறிப்பிடத்தக்கது.