பாம்பு தீண்டி பெண் உயிரிழப்பு ! சந்தனமடு ஆற்றுக்கு பாலம் இல்லாமையினால் தொடரும் உயிரிழப்புக்கள்

(சித்தாண்டி நித்தி) சித்தாண்டி சந்தனமடு ஆற்றுக்கு பலாம் ஒன்று இல்லாமையினால் தொடரும் உயிழப்புக்கள், நேற்று இரவு பாம்பு தீண்டி பெண் உயிரி ழந்துள்ளார். 

ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட ஈரளக்குள கிராமசேவகர் பிரிவு வேரம் எனும் கிராமத்திலுள்ள ஐந்து பிள்ளைகளின் தாயான வன்னச்சாமி செல்வரெட்ணம் (வயது 55) என்ற பெண் விசப்பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். 

நேற்று இரவு   பாம்பு தீண்டியதும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வேளையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. 

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 ஈரளக்குள கிரம சேவகர் பிரிவில் இருந்து வரும் மக்கள் சந்தனமடு ஆற்றைக்கடக்க வேண்டும். ஆற்றில் பகல் மற்றும் இரவு வேளையில் பாதுகாப்பான போக்குவரத்து இல்லை, போக்குவரத்து செய்வது சிரமம், கழுத்தளவு தண்ணீரில் தான் போக்குவரத்து செய்யவேண்டிய நிலை. இவ்வாறான நிலையில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் .