.jpg)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புனானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள மீள் குடியேற்றக்கிராமம்தான் குகநேசபுரம் கிராமமாகும்.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதார சூழ் நிலை காரணமாக 1990ம் ஆண்டு தங்களது குடியிருப்புக்களை விட்டு இடம் பெயர்ந்து உறவினர் நண்பர்களின் வீடுகளில் வாழ்ந்து வந்ததன் பின்னர் மீண்டும் 2007ம் ஆண்டு தங்களது இடங்களில் மீள்குடியேறி வாழ்ந்த வருகின்றனர்.
64 குடும்பங்கள் வாழும் இக் கிராமத்தில் இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது வயல் செய்வதிலும் வீட்டுத் தோட்டத்தில் ஈடுபடுவதிலும் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.
இக் கிராமத்திற்கு மின்சார வசதிகள் இல்லாததால் இவர்களுககு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படகின்றது இரவு 08.00 மணிக்கெல்லாம் யானை ஊருக்குள் வந்து இவர்களது தென்னந்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டங்களை நாசப்படுத்துவதாக இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் உற்பத்தி செய்யும் பயிர்களை முறையாக அறுவடை செய்வதற்கு முன்பாக யானைகளால் பயிர்கள் அழிக்கப்பட்டு விடுவதாகவும் தாங்கள் படும் கஸ்டத்திற்கு ஊதியம் கிடைக்காமல் பொய் விடுவதாகவும் கவலை தெரிவிக்கனிறனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குகனேசபுர கிராமத்திற்கு யானைகள் வராமல் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்.