மட்டக்களப்பில் இளைஞர்களின் இரத்ததான முகாம்!

2009 ஆம் ஆண்டு BATTI BOYS (2009 Batch) இளைஞர்களினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஐந்தாவது வருடமாக இவர்களின் இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இவ்வருடத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது 2009 வற்றி வோய் அணி இளைஞர்கள் 30 பேர் இரத்ததானம் வழங்கிவைத்தனர். 

இதில் மட்டக்களப்பு இலங்கை மின்சாரசபையைச் சேர்ந்த ஊழியர்களும்,உத்தியோகத்தர்களும் இரத்ததானம் வழங்கினர். மொத்தமாக இந் நிகழ்வின்போது 76 பேர் இரத்ததானம் வழங்கினர்.

இதன்போது மட்டக்களப்பு இரத்தவங்கி பிரிவின் வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் மற்றும் மட்டக்களப்பு இலங்கை மின்சாரசபையைச் சேர்ந்த ஊழிர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நாளையதினம் மட்டக்களப்பு கல்டியில்  உள்ள கொட்டேல் இன்றில் இவ் இளைஞர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.