
இதனை உத்தியோகபூர்வமாக கடந்த 04.05.2015 அன்று அவர்களின் பெற்றோரினால் அமைப்பின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர் சு.உதயகுமார் அவர்களும் கலாசார உத்தியோகஸ்தர் ஆ.பிரபாகரன் அவர்களும் பொறியியலாளர் நா.சோதிராஜா அவர்களும் மே.மாவட்டப் பதிவாளர் அ.பேரின்பநாயகம் அவர்களும் சு.விக்கினேஸ்வரன் அவர்களும்அவர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
,இவர் தனது ஊரின் மீது கொண்ட பற்றுக்காரணமாக பலசேவைகளைப்புரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை மனமுவந்து தெரிவித்துக்கொள்வதாக அமைப்பின் செயலாளர் தெரிவித்தார்.
சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினருக்கு ஓட்டமாவடி அல்-ஹிமா அமைப்பினரால் ஒரு தொகை அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது . அவற்றினை வாழைச்சேனை மின்சார சபை பிரதம பொறியியலாளர் திரு.நா.சோதிலிங்கம் அவர்களின் முயற்சியினால் இவற்றை எமது மாணவச் செல்வங்களுக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர். இதனை கடந்த 03.04.2015 அன்று மாணவர்களிடம் கையளித்தனர்.