வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற "நிலையுயர்வாளர் மதிப்பளிப்பு விழா".


(ச.மோகிலன்)
வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் (2001 Batch)  வட்டத்தின் ஏற்பாட்டினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையுயர்வாளர்  மதிப்பளிப்பு விழாவானது 29.05.2015 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு.அ.ஜெயஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதியாக திரு.செல்வநாயகம் ஸ்ரீகிருஷ்ணராஜா (வலயக்கல்விப் பணிப்பாளர், கல்குடா), கெளரவ அதிதிகளாக திரு.லிங்கராஜா கணேசமூர்த்தி (பிரதிப் பணிப்பாளர், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு) ,திரு. கந்தசாமி தயாபரன(சிரேஷ்ட சட்டத்தரணி - வவுனியா மாவட்டம்), திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் - நிர்வாகம்) , சிறப்பு அதிதிகளாக, திரு.நாகலிங்கம் குணலிங்கம் (கோட்டைக்கல்வி பணிப்பாளர் - கோரளைப்பற்று), விசேட அதிதிகளாக, திரு.பாலிப்பொடி கணேசமூர்த்தி (சமாதான நீதிவானும், ஓய்வுபெற்ற சேவைக்கால ஆலோசகரும்) அவர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 

மேலும் இந் நிகழ்வில் 5ஆம் தர புலமைப்பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும், க.பொ.த உயர்தரத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும், தேசிய மட்டத்தில் சாதனைகளை நிலை நாட்டிய மாணவர்களுக்கும், கேடயங்கள், நினைவுச்சின்னங்கள், மற்றும் பரிசுப்பொதிகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கும் இந்நிகழ்வின் போது பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிகழ்வுகளே மாணவர்களை உற்சாகப்படுத்தி வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல வழிவகுக்கும். ஆகவே 2001 ஆம் ஆண்டு பழைய மாணவர்களுக்கு எம் சமூகத்தின் சார்பில்  மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!