மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 15 வயதிற்குட்பட்ட பெண்களின் கபடி அணியினர் நேற்று(25.05.2015) செங்கலடி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட கபடியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளனர். இவர்கள் இறுதிப்போட்டியினை மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையுடன் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
பயிற்றுவித்த ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்துக்களை பாடசாலைச் சமூகம் தெரிவித்தனர்.
இவர்களை நேற்று மாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஊர்மக்கள் ஆகியோர் வரவேற்பளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.