.jpg)
பெரியபுல்லுமலை செபமாலை அன்னை திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய பாதயாத்திரை மட்டக்களப்பிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை (01) ஆரம்பமானது.
புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து 47 கி.மீ தூரம் கொண்ட பாதயாத்திரை திருமலை வீதி வழியாக செங்கலடி , பதுளை வீதி வழியாக செல்லும் யாத்திரை நாளை சனிக்கிழமை (02) காலை 8.30 மணியளவில் திருத்தலத்தை சென்றடையும்.
கடந்த காலங்களில் நடைபெற்று வந்ந இப்பாத யாத்திரை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலத்தினல் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் மீண்டும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பேராலயத்தின் பங்குத்தந்தை ஏ. தேவதாசன் தெரிவித்தார்.
கடந்த 4 வருடங்களாக பாரம்பரிய புனித யாத்திரை தொடர்ச்சியாக இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) வருடாந்த திருவிழா இடம்பெறுவதோடு கடந்த 24.04.2015 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.