(பழுவூரான்)
கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை இன்றய தினம் (14.05.2015) மட்டக்களப்பு நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் முதல் நிகழ்வாக 2012-2013 ஆம் ஆண்டுகளில் மாகாண அமைச்சுக்களிடையே உள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள், சுகாதார சேவைகள் நிலையங்களில் நடாத்தப்பட்ட தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களுக்கான உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
இவ் விருது வழங்கல் விழாவின் போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு விருது முதன் முறையாக வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். Dr.சுகுணன் அவர்கள் இவ் விருதினை மட்டு நகர் சார்பில் முதன் முறையாகப் பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.
குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் காபிஸ் நஸீர் அகமட் மற்றும் மாகாண அமைச்சர்களின் பங்கு பற்றுதலோடு நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டதோடு தீர்வுகளும் காணப்பட்டன. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், மாகாண சபை உறுப்பினர்களான ஆர். துரைரட்ணம், பிரசன்னா இந்திரக்குமார் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலை பயன்படுத்தும் மக்கள் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் அவர்களுக்கும் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் வாழ்த்துக்குளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.