பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தினர் 1000 மாணவர்களுக்கு வினாப்பத்திரம் வழங்கி வைத்தனர்.

(பழுவூரான்)
பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தினரால் போரதீவுப்பற்றில் உள்ள அனைத்து பாடசாலையிலும் உள்ள  தரம் 05  புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் 1000 மாணவர்களுக்கு  மாதிரி வினாப்பத்திரங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் போரதீவுப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளரும் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகரும் மற்றும் அனைத்து பாடசாலை அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.