திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பதவி ஓய்வு ! புதிய ஆயராக கிறிஸ்டியன்

திருகோணமலை மறை மாவட்டத்தின் புதிய ஆயராக வண.நொயல் இம்மானுவல் கிறிஸ்ரியன் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, புதிய மறை மாவட்ட ஆயராக வண.நொயல் இம்மானுவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களது பதவி விலகலை பாப்பரசர் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை என்ன காரணத்தின் அடிப்படையில் ஆயர் பதவியினை இராஜினாமா செய்தார் என்பது தெரிவிக்கப்படவில்லை.