பழுகாமத்தில் இடம்பெற்ற சுற்றாடல் தினமும் சின்னம் சூட்டல் நிகழ்வும்.

(பழுவூரான் & தாஸ்)
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்/பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் கழுிவுகளை தரம் பிரித்தல் மற்றும் முகாமை செய்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.சு.உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச சுற்றாடல் உத்தியோகஸ்தர் கி.யோகராசா சுற்றாடல் முன்னோடி ஆசிரியர் க.ரகுகரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது சுற்றாடல் முன்னோடி செயற்பாடுகளை திறம்பட செயற்பாடுகளை திறம்பட மேற்கொண்ட 18 மாணவர்களுக்கு பச்சை வர்ண பதக்கமும் 25 மாணவர்களுக்கு சுற்றாடல் முன்னோடி பதக்கமும்  சூட்டப்பட்டது. 
மேலும் உலக சுற்றாடல் தினத்தின் கருப்பொருளை மையமாகக் கொண்டு சுற்றாடல் முன்னோடி மாணவர்களால் கழிவுகளை தரம் பிரித்தல் கூட்டெரு தயாரித்தல் தொடர்பாக வீடுகள் வர்த்தக நிலையங்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. 
பழுகாமம் பிரதேச சபைக் கட்டிடத்தின் முன்னால் பிரதேச சபை செயலாளரின் தலைமையில் விழிப்புணர்வு கூட்டமும் இடம்பெற்றது.