புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் விண்ணேற்பு விழா

( சிவம் ) மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த விண்ணேற்பு விழா கூட்டுத் திருப்பலி இன்று சனிக்கிழமை (15) நடைபெற்றது.

கூட்டுத் திருப்பலியை மட்டக்களப்பு அம்பாரை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா, பேராலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி ஏ. தேவதாசன், அருட்பணி எம். ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோர் ஒப்புக்கொடுத்தனர். 

புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த கொடியேற்றம் கடந்த வியாழக்கிழமை (06) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.