மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக அபிவிருத்திப் பிரிவு மற்றும் மண்முனை மேற்கு பிரதேச மட்டத்திலான முதியோர் சங்கம் ஆகியவற்றின் ஒழுங்கில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மேலும் இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் வீ.செல்வநாயகம்,பிரதேச செயலக கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், நிருவாக உத்தியோகத்தர் ஜெ.ஜெயந்திரன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இதன்போது முதியோர் சங்கங்களின் கலை நிகழ்வுகள் மற்றும் வளர்ந்துவரும் முதியோர் சங்கங்களை கௌரவித்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.