குமர வித்தியாலயத்தில் வாணி விழா

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட குமர வித்தியாலயத்தில் இம்முறையும் வாணி விழாவானது அனுஷ்டிக்கப்பட்டது.

வாணி விழாவின் இறுதி நாளான 2015. 10. 21 அன்று வித்தியாலய  அதிபர் திரு. இ. இரத்தினகுமார் தலைமையில்  சிறப்பான முறையில் இடம்பெற்றது.  


நிகழ்வில் ஆலயடிவேம்பு சுவாமிஜி நித்யானந்தா அவர்கள் கலந்துகொண்டு ஆசி  வழங்கினார்.  அத்துடன்  கோட்டக் கல்வி அதிகாரி திரு V. ஜெயந்தன் அவர்களும் திருக்கோவில் கல்வி வலய கணக்காளர் திரு M. கேந்திரமுர்த்தி அவர்களும்  கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.