மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் வாணிவிழா நிகழ்வு


மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் வாணிவிழா நிகழ்வு நேற்று (20) பிரதேச செயலக மண்டப்த்தில் இடம்பெற்றது.


மண்முனை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்புடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் இந் நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.

இதன்போது முப்பெரும் தேவியர்களுக்கு விஷேட பூசை இடம்பெற்றது.

இந் நிகழ்வைத் தொடர்ந்து குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் உதவியுடன் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அன்றைய தினம் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.