
ரவிப்ரியா
கல்லாறு வை.எம்.சி.ஏ முன்பள்ளி பாடசாலை பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும், திங்களன்று (07) வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தி.அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.புவனசுந்தரம், முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருந்ததி சீவரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிதிகள் வரவேற்கப்பட்டு, சிறார்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. சிறார்களின் கலை திறன் நன்கு வெளிப்பட்டது.
அத்துடன் ஆண்டு ஒன்றுக்குச் செல்லும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு பிரதம அதிதிகளால் செய்து வைக்கப்பட்டது. பிரதம அதிதிகளில் ஒருவரான அருந்ததி தனதுரையில், இன்றைய குழந்தைகளின் நடனங்களில் பரதக் கலை வித்தகி பத்மா சுப்பிரமணியத்தின் முத்திரைகளை கண்ணுற்றேன். அந்தளவு மாணவர்கள் சிறப்பாக கலை நிகழ்வுகளில திறமையைக் காட்டியதைக் கண்டு மகிழ்வுற்றேன். கல்லாறு கல்விக்கும் கலைகளுக்கும் பெயர் பெற்றது என்பதை இந்த மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.
குழந்தைகளின் பாதுகாப்பு இலகுவில் பாதிப்படையக் கூடியது. எனவே அவர்களின் பாதுகாப்பில் பெற்றோர் கண்காணிப்புச் செலுத்த வேண்டும். ஒரு தாய் கருவுற்றிருக்கும் போது அந்த தாயின் செயற்பாடுகள் கருவில் இருக்கும் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் தொடர்பு பட்டதாக இருக்கின்றது. இதை நாம் அனுபவ ரீதியாகக் காணலாம். எனவே பெற்றோர் நல்லொழுக்கங்களை பேணுவதும் அவசிமாகும். ஏன்று குறிப்பிட்டார்.
மற்றுமொரு பிரதம அதிதியான புவனசுந்தரம் தனதுரையில். முன்பள்ளியில் சமூக இசைவாக்கத்திற்கான தயார்படத்தலே மெற்கொள்ளப்படுகின்றன. அவர்களின் கொள்ளவிற்கேற்பவே வரையறுக்கப்பட்ட கல்வி குறைந்தளவிலேயே போதிக்கப்படுகின்றது. ஏனெனில் கல்விச் சுமையை அதிகளவு சுமக்கம்போது அவர்கள் கல்வியிலேயே வெறுப்படைய கூடிய ஆபத்தும் இருக்கின்றது. எனவே சிறுவர் கல்வி என்பது முற்றிலும் வித்தியாசமானது என்பதைப் பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் பெற்றோரின் கண்காணிப்பு குறைவினாலேயே ஏற்படுகின்றது. தங்கள் கடமையை மற்றவர்களுக்கு பெற்றோர் கைமாறும் சந்தர்ப்பங்களிலேயே அதிகளவு சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு பெற்றோர் மூலகாரணமாக இருந்துவிடக் கூடாது. ஏன அவர் குறிப்பிட்டார்.