(வரதன், படுவான் பாலகன்)
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடி சுவாமி மலை கிராமத்தின் பிரதான வீதியில் இறந்த நிலையில் யானையொன்றின் சடலம் இன்று(19) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.