மூன்று வயது யானை இறந்த நிலையில் மீட்பு

( ஏஎம் றிகாஸ்)

சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானைக் குட்டியொன்று மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொடுவாமடு வயற்பிரதேசத்தில் உயிரிழந்து காணப்படுகிறது.


இந்த யானைக்குட்டியின் தும்பிக்கை மற்றும் தொடை பகுதிகளில் காயங்கள் காணப்படுவதாக காரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி ஸ்ரீ மஹலேகம் தெரிவித்தார்.

மனித நடமாட்டமில்லாத வயற்பிரதேசத்தில் காணப்படும் இந்த யானைக் குட்டியின் சடலம் தொடர்பில் வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளதா? அல்லது வேறுவிதமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதா என்பதை தமக்கு உறுதி செய்ய முடியாதுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த யானைக்குட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்து துர்வாடை வீசுகின்றபோதிலும் 20.02.2016 சனிக்கிழமையே தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)