பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மட்/பட்/ உதயபுரம் தமிழ் வித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் பேரின்பராஜா தலைமையில் நேற்று (04) வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், சிறப்பு அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது மாணவர்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பாண்டு வாத்தியக் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.