கோட்டைமுனை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வருடாந்த கொடியேற்றம்


(சிவம்)
மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று திங்கட்கிழமை (14) ஆரம்பமானது.
தொடர்ந்து எட்டு நாட்கள் திருவிழா நடைபெற்று ஒன்பதாம் நாள் செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை 4.00மணிக்கு ஸ்நபன அபிஷேகத்துடன் கிரியைகள் ஆரம்பமாகி பஞ்சரதபவனி பொற்தொழிலாளர் வீதி,பாடும்மீன் வீதி, பயனியர் வீதி, அரசடிச் சந்தி, பெயிலி வீதி, புனித செபஸ்தியார் வீதியூடாக ஆலயத்தைவந்தடையும்.

பங்குனி உத்தர தீர்த்தோற்சவம் புதன்கிழமை (23) காலை 6.00 மணிக்கு கல்லடிக் கடற்கரையில்நடைபெறும்.

கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (24) அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகமும் ஏனையபரிவார மூர்த்திகளுக்கு விசேட அபிஷேகமும் நடைபெறும்

மஹோற்சவக் கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உலகவிக்னேஸ்வரக் குருக்கள தலைமையில்நடைபெறும்.