வாகரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2016



(கோபி) இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் Deaf Link அமைப்பினால் வாகரைப் பிரதேச மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான தையல் தொழிற் பயிற்சியை சிறப்பாக பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும், வலுவூட்டல் நிகழ்ச்சியும் தொடர்ச்சியாக இடம்பெற்றன. 

இந்நிகழ்வானது  Deaf Link அமைப்பின் கிழக்கு பிராந்திய இணைப்பாளரான திரு.T.இளையராஜா அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவின் அனுசரணையுடன் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 06.06.2016 ம் திகதி பிரதேச செயலாளர் செல்வி S.R.இராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் செல்வி A.அமலினி, வாழைச்சேனை வைத்தியசாலை உளநலப் பிரிவின் வைத்திய அதிகாரிகள், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் S.அருள்மொழி, பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிரான் மற்றும் கல்லடி மெதடிஸ்த திருச்சபையின் குருவானவர்கள், அருட் தந்தை போல் சற்குணநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கி வைத்தனர்.

அத்துடன் இந்நிகழ்வில் தையல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களினால் தைக்கப்பட்ட ஆடைகள் விற்பனையும் ஆரோக்கியா மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை சிறப்பம்சங்களாகும்.