எல்லே குழு விளையாட்டுப்போட்டியில் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணா வித்தியாலயம் மாகாண மட்டத்தில் முதலாம் இடம்.

 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டி நிகழ்ச்சியில் மட்/ககு/முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணா வித்தியாலயமானது முதலாம் இடத்தைப் பெற்று தேசியட்டத்திற்கு தெரிவாகி உள்ளது.


இவ்வெற்றியானது எமது பாடசாலைக்கும் கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையை அடைய பயிற்றுவித்த எமது வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் செ.வேணுகோபாலராஜ் அதிபர் தா.சண்முகதாஸ் வெற்றி பெற்ற வீராங்கணைகளுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக மனம்மார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் பாடசாலை சமுகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்தூள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்திற்கும் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணா வித்தியாலயத்திற்குமிடையே கடந்த திகதி 23ஆம் திகதி நிந்தவூர் பொது மைதானத்தில்  இடம்பெற்ற இப் போட்டியில்   இராமகிருஷ்ணா வித்தியாலயம் மகாண மட்டத்தில் வெற்றி பெற்றுக்கொண்டது.