திருக்கோவில் ஆலயத்திற்கு பல்தேவை மண்டபத்தை ஒருகோடி ருபா செலவில் அமைத்துக்கொடுக்கும் பரோபகாரி !

(காரைதீவு சகா )


வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கு ஒரு கோடிருபாவிற்கும் அதிகமான செலவில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும்  எம்மவர் ஒருவர் அழகான பல்தேவைக்கட்டடமொன்றை அமைத்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.

மட்டக்களப்பு பெரிய கல்லாற்றைச்சேர்ந்த பரோபகாரி  விஸ்வலிங்கம் கனகலிங்கம்  என்பவரே இவ்விதம் ஒருகோடி ருபாவிற்கும் மேற்பட்ட தொகையை ஆலயத்தின் சமுகசேவை செயற்பாட்டிற்கு வழங்கியுள்ளார்.

காலஞ்சென்ற அவரது மனைவியின் ஞாபகார்த்தமாக இக்கட்டட உதவியை அவர் இவ்வாலயத்திற்கு வழங்கியுள்ளார்.

அதற்கான கட்டட நிருமாணவேலைகள் பொறியியலாளர் ஞானப்பிரகாசத்தின் மேற்பார்வையில் தற்சமயம் ஜருராக இடம்பெற்றுவருகின்றது.

ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் விடுத்த வேண்டுகோளையேற்று ஏலவே கடந்தவருடம்  இங்கு அவர் 25லட்சருபா செலவில் பாரிய ஒரு நீர்த்தாங்கியை அமைத்து கடந்த ஆடிஅமாவாசைத் தீர்த்தோற்சவத்தின்போது ஆலய நிருவாகத்திடம் கையளித்தார்.

இத்தாங்கியில் 10ஆயிரம் லீற்றர் நீர் தேக்கிவைக்கலாம்.
இந்நீர்த்தாங்கி ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தீர்த்தோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கதிர்காம பாதயாத்திரீகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிக்க பயனுடையதாக விளங்குகின்றதென ஆலய தலைவர் சு.சுரேஸ் நன்றியுடன் தெரிவிக்கின்றார்.

தற்போது அமைக்கப்பட்டுவரும் பல்வேக்கட்டடம் அநேகமாக இன்னும் 6மாதகாலத்துள் பூர்த்தியாகும். இம்மண்டபம் அன்னதானம் கலாசாரதேவைகள் மற்றும் விழாக்கள் நிகழ்வுகள் அனைத்திற்கும் மிகவும் பிரயோசனமாகவிருக்குமென அவர் மேலும் சொன்னார்.

பெரிய கல்லாற்றைச்சேர்ந்த விஸ்வலிங்கம் கனகலிங்கம்  அவரும் அவரது குடும்பத்தினருக்கும் ஆலயம் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாக அவர் கூறினார்.