சட்டத்தினை சரியாக நடைமுறைப்படுத்தினால் எல்லா விதமான பிரச்சினைகளும் தானாக நிற்கும்! - அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்


எல்லா விடயங்களுக்கும் சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்தினால் சிறுவர்கள், பெண்கள் தொடர்பான அனைத்துப்பிரச்சினைகளும் இல்லாமல் போய்விடும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்றைய தினம் பகல்  மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுத் தலைவருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

இடைவிலகல், மற்றும் ஒழுங்கற்ற பாடசாலை வரவு என்பன கல்வியைப் பாதிக்கின்ற விடயமாகும். எனவே இதனை முக்கியமாகக் கவனத்துடன் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது.


சட்டங்களைப் பொறுத்தவரையில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாதுகாவலர் மாவட்ட நீதிகபாதியாகும். கடந்த காலங்களில் குடும்பத்தில் பிள்ளைகள் சகல போசாக்குகளுடனேயே இருந்தனர். அந்தக்காலத்தில் தனித்தனியாக ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகள் இருக்கவில்லை. ஆனாலும், பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்காக போதுமான போசாக்கான உணவுகளை வழங்குவதும் பெற்றோர்களின் கடமையாகும். இது பொறுப்பாகும். இந்தப் பொறுப்பினைச் செய்யத்தவறுகின்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.


நாங்கள் எல்லோரும் கூடியிருந்து சட்டங்கள் இருக்கின்றனவா என்று கலந்துரையாடுவதனைவிடவும், சட்டத்தினை சரியாக நடைமுறைப்படுத்தினால் எல்லா விதமான பிரச்சினைகளும் தானாக நிற்கும். ஒவ்வொரு சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கும் நிறுவனங்கள் இருக்கின்றன.

போதிப்பதிலோ ஆலோசிப்பதிலோ நேரத்தினை விரயம் செய்வதனைவிடவுமு; சட்டத்தினை சரியாகப் பார்த்தால் சரி. 18 வயது வரையில் பிள்ளைகளுக்கு சரியான கல்வியைக் கொடுக் கவேண்டியது பெற்றோரது கடமை. அதற்குத் தவறினால் பெற்றோரைத்தான் தண்டிக்க வேண்டும்.

1960 கிளோ அதற்கு முன்னரோ எந்த அமைப்பும் அரசாங்கத்துக்கு உதவி செய்வோ, நிறுவனங்கள, உத்தியோகத்தர்கள் வரவோ இல்லை. ஆனால் அப்போதெல்லாம் பிள்ளைகள் சிறப்பாக வளர்க்கப்பட்டார்கள். சமூகத்தில் ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை என்றார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனின் ஆரம்பமான இக் கூட்டத்தில், மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி சம்பந்தமான கடந்த கால வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி எம்.அச்சுதன்,  மாவட்ட உள நல மருத்துவ நிபுணர் ரி.கடம்பநாதன், சிறுவர் நல மருத்தவ நிபுணர்,  உள்ளிட்டேர்ரம் கலந்து கொண்டனர்.

இதன்போது , மாவட்டத்திலுள்ள சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில பிரதேச செயலாளர்கள், சிறுவர் தொடர்பில் செயற்படும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள்  சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் தொடர்பான செயற்படும் அரச சார்பற்ற நிறுவனஙகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.