தென்னந்தோப்புக்கள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம்

(ஏஎம் றிகாஸ்)

மட்டக்களப்பு - மாவடிவேம்பு பிரதேசத்தில்  04 அதிகாலையில்  தென்னந்தோப்புக்கள் புகுந்த காட்டு யானைகள் கூட்டமொன்று பெரும் எண்ணிக்கையிலான தென்னை மரங்களை அழித்துள்ளன.

அதிகாலை வேளையில் ஆறு யானைகள் சுற்றுவேலியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து தோட்டக்காவலாளியின் வாடியை உடைத்துள்ளதுடன் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி துவம்சம் செய்துள்ளன.

காவலாளி அச்சமயம் வாடியில் தங்கியிருக்காததனால் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

இத்தோட்டத்தில் காய் தரக்கூடிய முப்பதிற்கு மேற்பட்ட இளந்தென்னங்கன்றுகள் முற்றாக துவம்சம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவடிவேம்பு பிரதான வீதியை அண்மித்த பகுதி தோட்டத்திலேயே காட்டு யானைகளின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தோட்ட உரிமையாளரினால் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.