ஆயித்தியமலை புனித சதா சகாயமாதா அன்னை திருத்தலத்தின் 62 வது திருவிழா!

ஆயித்தியமலை புனித சதா சகாயமாதா அன்னை திருத்தலத்தின் 62 வது திருவிழா 26.08.2016 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

04.09.2016 ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா தலைமையில் முதல் திருப்பலி காலை 5.15 மணிக்கும், இரண்டாம் திருப்பலி காலை 7.15 மணிக்கும் ஒப்புக்கொடுக்கப்படும்.




நாள்                                        அருளுரையாளர்

26.08.2016                                அருட்தந்தை அன்ரூ ஸ்ரிபன்
27.08.2016                                அருட்தந்தை A.தேவதாசன்
28.08.2016                                அருட்தந்தை பயஸ் பிரசன்னா
29.08.2016                                அருட்தந்தை ஜிரோன் டிலிமா
30.08.2016                                அருட்தந்தை நிர்மல் சூசை JDH
31.08.2016                                அருட்தந்தை X.I.ரஜீவன்
01.09.2016                                அருட்தந்தை G.மகிமைதாஸ் CRS
02.09.2016                                அருட்தந்தை தேவராஜ் CFM
03.09.2016                                 அருட்தந்தை G.V. அன்னதாஸ்



நவநாட்கள் தினமும் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலி, அன்னையின் ஆசீர் ஆகியவற்றுடன் நிறைவுபெரும்.

பாதயாத்திரை 03.09.2016 சனிக்கிழமை புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் காலை 5.15 மணி திருப்பலியைத்தொடர்ந்து வவுணதீவு ஊடாகவும், செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தில் காலை 5.15 மணி திருப்பலியைத்தொடர்ந்து கரடியனாறு ஊடாகவும் திருத்தலம் சென்றடையும். எனவே யாத்திரிகர் விரைந்து திருப்பலியில் கலந்து கொண்டு உங்கள் யாத்திரையை ஆரம்பிக்க வேண்டுகிறோம். மட்டக்களப்பு பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தினர் பாத யாத்திரையை நெறிப்படுத்துவார்கள்.

03.09.2016 அன்று மாலை 6.00 மணிக்கு திருப்புகழ் மாலை வழிபாடு நடைபெறும்.

இரக்கத்தின் ஆண்டினை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் 03.09.2016 அன்று இரவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து இறை இரக்கத்தைப்பற்றிய   திரைப்படம் காண்பிக்கப்படும்.

தனிப்பட்ட கூடாரங்கள் அமைத்து தங்கவிரும்புவோர் முன்கூட்டியே அறிவித்து உங்களுக்கான இடங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.