இவ்விபத்துச் சம்பவம் வியாழக்கிழமை இரவு 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் அத்தியவசிய உணவுப்பண்டங்களை ஏற்றிச் செல்லும் கொள்கலனே மாவு மூடைகளை ஏற்றிச் சென்ற போது இவ்வாறு திடிரென தீப்பற்றியுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சென்ற போதே கந்தளாய், பொட்டகாடு,எரிக்கிளம் காட்டுப்பகுதியில் வைத்து கொள்கலன் பெட்டி வாய்க்காலுக்குள் தலை கீழாக குடைசாந்ததோடு ,கொள்கலன் தீப்பற்றியது உடனே அப்பிரதேச பொதுமக்கள் கந்தளாய் பொலிஸாருக்கும்,பொலிஸ் அவசர பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டு தீப்பிடித்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் இயந்திரக் கோளாறுகள் காரணமாகவே இவ்வாறு தீப்பிடித்திருக்கலாம் எனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






.jpg)


.jpg)
.jpg)
.jpg)


