ஆரம்பபிரிவு மாணவர்களுக்கென கல்வியமைச்சினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள '' செயற்பட்டு மகிழ்வோம் '' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டு விழாவினை கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் கோறளைப்பற்று கோட்ட மட்டத்தில் 13.09.2016 காலை 9.00 மணிக்கு வலயத்தின் ஆரம்பபிரிவுக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.க.யோகராசா அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது.இவ் விழாவில் 22 பாடசாலைகளைச் சேர்ந்த 720 மாணவர்கள் பங்குபற்றினர்.
இவ்விழாவில் பிரதம அதிதியாக கல்குடா கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.செ.ஸ்ரீகிருஷ்ணராஜா அவர்களும் சிறப்பு அதிதிகளாக வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.தி.ரவி (முகாமைத்துவம்) மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.சா.ரவிராஜ் அவர்களும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.நா. குணலிங்கம் மற்றும் இவ் விளையாட்டு விழாவினை திறம்பட நடாத்துவதற்கு அனுசரனை புரிந்த World Vision கிரான் ADP முகாமையாளர் கிந்துறொகாஸ் குமாரசுவாமி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வானது கல்குடா கல்வி வலயத்தின் ஆரம்பப்பிரிவு விளையாட்டு இணைப்பாளர் திரு.நா.சதார்த்தனன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது.













.jpg)


.jpg)
.jpg)
.jpg)


